மூடநம்பிக்கைகள் மூலம் மக்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்
மூடநம்பிக்கைகள் மூலம் மக்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
சரக்கு ஆட்டோ உள்பட பல்வேறு வாடகை வாகனங்களை வாங்க சிறுபான்மையினருக்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பணம் வங்கி மூலம் கடன் வழங்க அரசு உதவி செய்கிறது. சிறுபான்மையினரிடம் வேலையின்மை அதிகமாக உள்ளது. அவர்களும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய அரசு உதவிகளை வழங்குகிறது. முதல் முறையாக 500 பேருக்கு அரசின் உதவிகள் வழங்கப்படுகின்றன.
தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். இதன் மூலம் சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும். இது அரசியல் சாசனத்தின் விருப்பம் ஆகும். இந்த பணிகளை செய்வது அரசின் கடமை ஆகும். சமத்துவம் வேண்டாம், ஏற்றத்தாழ்வுகள் தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள்.
மூடநம்பிக்கைகள் மூலம் மக்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். கல்வி கற்று முன்னேற்றம் அடைந்தால் அவர்களை ஏமாற்ற முடியாது. வரும் நாட்களில் இன்னும் அதிக நபர்களுக்கு அரசின் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story