பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 4:00 AM IST (Updated: 13 March 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து பகுதிகளில் தினமும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வீரபாண்டியன்பட்டினத்தில் காயல்பட்டினம் ரோடு, அடைக்கலாபுரம் ரோடு சந்திக்கும் இடத்தில் டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும். சிங்காரவேலன் தெரு நுழைவுவாயிலில் சரிந்தவாறு உள்ள வேப்ப மரத்தை அகற்ற வேண்டும். மேலும் அங்கு சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை சாலையோரமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பா.ம.க. சார்பில், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின் ரொட்ரிகோ, துணை தலைவர்கள் கருப்பசாமி, மைதீன், துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் சிவலிங்கம், செயலாளர் பிரபாகரன், நகர தலைவர் முருகன், செயலாளர்கள் மாரியப்பன், விக்னேஷ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story