வியாபாரிகள் தாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுரை


வியாபாரிகள் தாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுரை
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 13 March 2018 11:47 PM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகள் தாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் வருமான வரித்துறை சார்பில் வரி தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வருமான வரித்துறை அலுவலர்கள் ஆனந்ததீர்த்தன், செங்குட்டுவன், வருமான வரி ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு வரி செலுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்கியதோடு வியாபாரிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.

அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் பேசும்போது, வியாபாரிகள் தாமாகவே முன் வந்து வரி செலுத்த வேண்டும். அரசை ஏமாற்றி வரி செலுத்தாமல் இருந்தால் சோதனையில் கண்டறியப்படும். அதுபோன்ற நிறுவனங்களில் நாங்கள் சந்தேகம் ஏற்பட்டு சோதனையிடவும், அதில் சிக்கினால் கடும் அபராதத்துடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் கலைமணி, நிர்வாகிகள் காசிராஜ், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story