சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
கோவை,
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த பாட்ஷா, அன்சாரி உள்பட பலர் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். எனவே 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்த ரிஸ்வான் பாட்ஷா என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று காலை கோவை வந்தார். அவர் அந்த கட்சியின் நிர்வாகிகளு டன் கோவை மத்திய சிறைக்கு சென்றார். அங்கு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பாட்ஷா, அன்சாரி உள்பட பலரை சந்தித்து பேசினார்.
பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் கைதிகளையும், சிறை சூப்பிரண்டையும் சந்தித்து பேசினேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தன்னை விடுதலை செய்து விடுவார்கள் என்று ரிஷ்வான் பாட்ஷா நினைத்தார். ஆனால் விடுதலை செய்யவில்லை. அந்த மன அழுத்தத்தில்தான் அவர் இறந்து உள்ளார். எனவே அவருடைய குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
மேலும் மாநில அரசு தனக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் கைதிகளை மன்னித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களை எவ்விதத்திலும் பழிவாங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story