குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலத்த காயம்: மதுரையில் 12 பேருக்கு தீவிர சிகிச்சை
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களில் 12 பேருக்கு மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நிஷா என்ற பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மேலும் 13 பேர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும், மீனாட்சி மிஷன், அப்பல்லோ, கென்னட் ஆகிய தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச்சேர்ந்த விவேக் என்பவருடைய மனைவி பேராசிரியை திவ்யா (வயது 29) நேற்று பரிதாபமாக இறந்தார். செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த திவ்யாவின் நிலைமையை கண்டு கதறிய பெற்றோர், தங்கள் பிள்ளையை சிரமப்படுத்த வேண்டாம் என்றும், அவர் எவ்வித தொந்தரவும் இல்லாமல் இறைவனிடம் சென்றடைய வேண்டும் என்றும், எனவே வென்டிலேட்டரை எடுத்து விடும்படியும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். எனவே சுவாசக்கருவி அகற்றப்பட்டது.
அவரது உயிர் பிரிந்ததும், உடனடியாக பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. திவ்யாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
(திவ்யாவின் கணவர் விவேக் காட்டுத்தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்ததும், இவர்கள் புதுமணத்தம்பதியர் என்பதும் குறிப்பிடத்தக்கது).
தற்போது மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில், கிரி மகன் கண்ணன்(26), எடப்பாடியை சேர்ந்த பழனிசாமி மகள் தேவி(26), உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி(26), சென்னை முத்துமாலை மகள் அனுவித்யா(25), தஞ்சாவூர் கிருஷ்ணமூர்த்தி மகள் சாய்வசுமதி(26) ஆகிய 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சென்னை எத்திராஜன் மகள் நிவ்யநிக்ருதி(24), கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ஜோசப்ஜார்ஜ் மகள் மினாஜார்ஜ் (32) ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர்.
கிரேஸ் கென்னட் ஆஸ்பத்திரியில் திருப்பூர் தேக்கம்பாளையம் சரவணன் மனைவி சக்திகலா(40), ஈரோடு ராமசாமி மகன் சதீஷ்குமார்(29), பொள்ளாச்சி கவுண்டம்பாளையம் திவ்யா விஸ்வநாதன்(23) ஆகியோர் சிகிச்சை பெறுகிறார்கள்.
மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சென்னை தினேஷ் மனைவி சுவேதா(28), சூரியநாராயணன் மகள் பார்கவி(23) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை பார்த்தார்.
பின்னர் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது உறவினர்கள் அவரது காலில் விழுந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றித் தருமாறு கண்ணீருடன் கேட்டனர். அவர் கண்டிப்பாக அனைவரும் நலமாக திரும்பி வருவார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கண்ணன், கிரேஸ் கென்னட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சக்திகலா, சதீஷ்குமார், திவ்யா விஸ்வநாதன், மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பார்கவி, சுவேதா ஆகிய 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்களுக்கு டீன் உத்தரவின்படி ஆஸ்பத்திரி நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் நிலவரங்களை தெரிவிக்க தனியாக நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிகிச்சை பெறுபவர்களை காலை, மாலை என இருவேளையும் உறவினர்கள் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story