பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2018 4:15 AM IST (Updated: 14 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

பணியிடங்களை குறைக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து நீடாமங்கலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், பணியிடங்களை குறைக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர்கள் குமரவேல், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கவுதமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட், மாவட்ட துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வேலைவாய்ப்பு பறிப்பு

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாதவராஜ், ஊரக வளர்ச்சித்துறை சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், சங்க துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story