திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 ஆங்கிலம் முதல் தாள் தேர்வை 467 பேர் எழுத வரவில்லை
பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 467 பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை.
திருப்பூர்,
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தமிழ் முதல்தாள், 2-ம் தாள் தேர்வுகள் முடிந்த நிலையில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 25,390 பேரும், தனித்தேர்வர்கள் 45 பேரும் என்று மொத்தம் 25,435 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 24,927 பேரும், தனித்தேர்வர்கள் 41 பேரும் என்று மொத்தம் 24,968 பேர் எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 463 பேர், தனித்தேர்வர்கள் 4 பேர் என்று மொத்தம் 467 பேர் தேர்வை எழுத வரவில்லை.
நேற்று நடைபெற்ற ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் எந்த விதமான முறைகேடுகளும் இல்லாமல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி தெரிவித்தார். தேர்வு எழுதி விட்டு தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் ஆங்கில முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
விஜயலட்சுமி:- 1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நான் புத்தகத்தில் பாடத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருந்த வினாக்களையே தேர்வு செய்து அதற்கான விடைகளை மட்டுமே படித்திருந்தேன். இதனால் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு சரியாக பதில் எழுத முடியவில்லை.
யுகேஷ்:- ஆங்கிலம் முதல் தாள் தேர்வு கடினமாக இருந்தது. பாடத்தின் உள்பகுதியில் இருந்து வினாக்களை மாற்றி மாற்றி கேட்டிருந்ததால் யோசித்து விடை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 1 மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக விடை எழுத முடியவில்லை.
Related Tags :
Next Story