இளைய சமுதாயத்தினர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உதவியாக இருக்க வேண்டும்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த இளைய சமுதாயத்தினர் உதவியாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.
திருச்சி,
சமூகநலத்துறையின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவது குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது. இந்த பேரணியில் கலந்து கொண்ட 10 பேர் மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று மீண்டும் சென்னை திரும்புகிறார்கள். பேரணி செல்லும் வழியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
நேற்று காலை திருச்சிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேரையும் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஜமால்முகமது கல்லூரி சார்பில் வரவேற்றனர். அதன்பிறகு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
பெண்களை மதிக்க வேண்டும்
இந்த பேரணியை நடத்துவதன் முக்கிய நோக்கம் நல்லொழுக்கத்தையும், சிறந்த ஆளுமைப்பண்பையும் வளர்த்து கொள்வதுமாகும். ஒவ்வொரு கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களிடையே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நல்ல சமுதாயம் தான் நல்ல குடிமகனை உருவாக்க முடியும். பெண்களை ஆண்களுக்கு இணையாக நாம் மதிக்க வேண்டும். படிக்கும் பெண்கள், உழைக்கும் மகளிர், அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டும். குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். நாம் பெற்றெடுத்த தாய்-தந்தையரை மதிக்க வேண்டும். நம்முடைய சுற்றுப்புறம் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டின் வளர்ச்சி மேம்படும். இன்றைய இளைய சமுதாயமான நீங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் திருச்சியில் இருந்து பேரணியை கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் உஷா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் காஜாநஜுமுதீன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story