வன்முறை தொடர்பான வழக்குகள் திரும்பபெறப்படும்
புனே மாவட்டம் பீமா- கோரேகாவில் கடந்த ஜனவரி 1-ந் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் பலியானார்.
மும்பை,
புனே மாவட்டம் பீமா- கோரேகாவில் கடந்த ஜனவரி 1-ந் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அப்போது பல அரசு, மாநகராட்சி பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் 622 வழக்குகள் சுமார் 2 ஆயிரம் பேர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் நேற்று பேசியதாவது:-
பீமா-கோரேகாவ் சம்பவத்தை அடுத்து நடந்த வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பபெற முடிவு செய்து உள்ளது. எனினும் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பீமா -கோரேகாவ் சம்பவ வன்முறையின் போது ரூ.13 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story