பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் கொலையில் மேலும் ஒருவர் கைது


பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 14 March 2018 7:59 AM IST (Updated: 14 March 2018 8:40 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் கொலை சம்பவத்தில் மேலும் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார். இவர் பாளையங்கோட்டை அண்ணா நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், டாக்டர் பாலமுருகன் என்பவருக்கும் கே.டி.சி. நகரில் உள்ள ஒரு இடத்தை விலைக்கு வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கொடியன்குளம் குமாரை கொலை செய்ய ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது மருமகனும், என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமாரை வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் அந்த கும்பல் கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ராஜசேகர், அஸ்வின், சாமி, பிரவீன்ராஜ், ராஜா, நடராஜன், அருண்பாபு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மன்னார்புரத்தை சேர்ந்த முனியசாமி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த, தூத்துக்குடியை சேர்ந்த வாணிராஜன் மகன் சுரேஷ்குமார் என்ற கார்த்திக் (23) என்பவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story