எஸ்.எஸ்.எல்.சி. நாளை மறுநாள் தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி. நாளை மறுநாள் தொடங்குகிறது 23,624 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 624 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் உள்ள 86 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட 296 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 624 மாணவ -மாணவிகள் எழுதுகின்றனர். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 904 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 729 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 63 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 61 தேர்வு மையங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வை கண்காணிக்க 95 முதன்மை கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 10 கூடுதல் துறை அலுவலர்கள், 190 பறக்கும்படை உறுப்பினர்கள், 1,333 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

Related Tags :
Next Story