வரும் முன் காப்போம்; பேரிடர் தவிர்ப்போம்
பொதுவாக மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கிய பிறகு வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
தேனி மாவட்டம் போடி தாலுகாவில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீ, அங்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சென்னை உள்பட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 11 பேரை காவு வாங்கியது. இன்னும் பலர் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துயர சம்பவம் நம் அத்தனை பேரின் இதயத்தையும் நொறுக்கிப்போட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும், இறந்தவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறது. இதுபோன்ற கோர விபத்து இனி யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என ஒவ்வொருவரின் உள்ளமும் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறது.
பொதுவாக மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கிய பிறகு வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதுபோன்ற நேரங்களில், தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ள வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உள்பட யாரையும் சுற்றிப்பார்க்கவோ, மலையேற்ற பயிற்சி செய்யவோ வனத்துறையினர் அனுமதி அளிக்க கூடாது.
அனுமதியின்றி யாரேனும் நுழைகிறார்களா? என்பதையும், எங்கேயாவது தீ விபத்து ஏற்படுகிறதா? என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதற்காக ரோந்து குழுவை அதிகரிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் தமிழக வனத்துறையினர் மேற்கொள்கிறார்களா? என்பது பெரும் கேள்வி.
அதே போல, வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்த தீ விபத்து அங்குள்ள விலைமதிப்பில்லா மரம், செடி, மூலிகைகளுக்கும், வன விலங்குகளுக்கும் எமனாகிவிடும். இதனால் தான் தீ விபத்து ஏற்படாமல் இருக்கவும், முன்கூட்டியே தடுக்கவும் வெயில் காலங்களில் வனத்துறை உஷாராக இருக்க வேண்டும். பேரிழப்பை தவிர்க்க வனத்துறை முழு முனைப்போடு செயல்பட வேண்டும்.
இல்லையென்றால், காட்டுத்தீயால் விலை மதிப்பில்லா வனம் அழிய நேரிடும். தேனியில் எரிந்த நெருப்பில் பல உயிர்கள் கருகியதைப் பார்த்து நல்லோர் நெஞ்சங்கள் கதறி துடிக்கின்றன. காட்டுத்தீயில் சிக்கி பலியான இந்த அப்பாவி நபர்களின் இறப்புக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.
முதலாவதாக, வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு போவதும், ஆய்வு செய்ய போவதும் வனத்துறையினருக்கு தெரியாமல் நடக்கக்கூடாது. யாராக இருந்தாலும் வனத்துறையின் அனுமதி பெற்றே வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும்.
அப்படி இருக்கையில், தற்போது பேராபத்தை சந்தித்தவர்கள் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றனரா? அல்லது அவர்களை அழைத்து சென்ற வழிகாட்டிகள் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றார்களா? சில நாட்களாக காட்டுத்தீ அவ்வப்போது பரவுவது அறிந்தும் வனத்துறை அனுமதி அளித்ததா? அல்லது அனுமதியின்றி சென்றிருந்தால் அவர்களை தடுக்க வனத்துறை தவறியதா? ஏற்கனவே தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்த நிலையில் வனப்பகுதியை கண்காணிக்காமல் வனத்துறை மெத்தன போக்கை கடைபிடித்ததா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
வனத்துறையினர் தங்கள் பணியில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு இருக்க வேண்டும். மலையேற சென்றவர்கள் அனைவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்து, மலைப் பயணம் எப்படி இருக்கும்? காட்டு விலங்குகள் வழி மறித்தாலோ, தீ விபத்து ஏற்பட்டாலோ அதில் இருந்து எப்படி தப்புவது? என்று விளக்கம் அளித்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி இருந்தால் அநியாயமாக இத்தனை உயிர் பலிகள் ஏற்பட்டு இருக்காது.
மொத்தத்தில், யாருடைய மெத்தனத்தாலோ இயற்கை எப்போது பேரழிவை தரும்? என அறியாத அப்பாவி பிள்ளைகள் இன்றைக்கு தீயில் வெந்து உயிரை இழந்துவிட்டனர். வனத்தோடு விளையாட சென்றவர்களில் பலர் இன்று பிணமாகி இருக்கிறார்கள். இப்படியொரு வேதனை ஒருகாலமும் அரங்கேறக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தில் இதுவரை மரக்கிளைகளை பயன்படுத்தி தான் வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கிறார்கள். தீ பற்றி எரியும் பகுதிக்கும், மற்ற பகுதிக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மரம், செடி, கொடிகளை அழித்து பிற இடங்களுக்கு தீ பரவாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த வழிமுறைகள் எல்லாம் மிகுந்த பலனை தராது. தீயின் ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகள் தவிடுபொடியாகிவிடும்.
வனவிலங்குகள், அங்குள்ள இயற்கை வளங்களை அழிக்கவிடாமல் பாதுகாப்பது அவசியம். நம் நாடு விஞ்ஞான ரீதியாக பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. ஆனால் வனப்பகுதியில் தீயை அணைக்க இன்னும் நவீன கருவிகளை நாம் பயன்படுத்தாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
குறிப்பாக, ஹெலிகாப்டர் மூலமும், தரை வழியாக பல நூதன கருவிகளை உபயோகித்தும் காட்டுத்தீயை அணைக்கலாம். சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மகாணத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயை ராணுவத்தினர் தீயணைப்பு படையினருடன் இணைந்து அணைத்ததும், இதில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குரங்கணி பகுதியில் ஏற்கனவே சில நாட்களாக பற்றி எரிந்த தீயை நவீன உபகரணங்கள் மூலம் தொடக்கத்திலேயே வனத்துறை அணைத்திருக்கலாம். இதற்கு வனத்துறைக்கு நவீன உபகரணங்கள், தீயை அணைக்க ஹெலிகாப்டர் போன்றவை வழங்கப்பட வேண்டியது அவசியம்.
அதுமட்டுமின்றி, தேசிய பேரிடர் மையம் நமது பிரதமரின் தலைமையின் கீழ் டெல்லியில் இயங்குகிறது. எல்லா மாநில தலைநகரங்களிலும் பேரிடர் தடுப்பு அலுவலகம் செயல்படுகிறது. ஆனால் இந்த செயலகம் செயலின்றி இருக்கிறது. அண்மையில் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய போதும் இந்த பேரிடர் செயலகம் செயலற்று இருந்தது. செயலற்று இருக்கக் கூடாது என்று சென்னைக்கும், டெல்லிக்கும் பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் கூட நடந்தன.
ஆனால் இவை எல்லாம் அரசின் காதுகளுக்கு எட்டவில்லை. ஒகி புயல் சுழன்றடித்து சென்று மாதங்கள் உருண்டோடியும் இன்னும் பேரிடர் செயலகம் பாடம் படிக்கவில்லை. இனியாவது காலதாமதமின்றி பேரிடர் செயலகம் பேரிடர்கள் ஏற்படும் போது உடனடியாக செயலில் இறங்க தயாராக இருக்க வேண்டும். அது போல் வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் விழிப்போடு செயல்பட வேண்டும்.
நான்கைந்து நாட்களாக தேனி காடுகளில் காட்டுத்தீ பரவியுள்ளதாக அறிவிப்புகள் இருந்தும் அதை கட்டுப்படுத்த வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் சரியான நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. வரும் முன் காப்பதுவே சாலச்சிறந்தது. ஆபத்து வந்த பின் நடவடிக்கை எடுப்பதும், நிவாரணம் அறிவிப்பதும் சரியல்ல.
- டாக்டர் ஆர்.எஸ்.லால் மோகன்

Related Tags :
Next Story