குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 7–வது நாளாக ஆர்ப்பாட்டம்


குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 7–வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:15 AM IST (Updated: 14 March 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள கிராம குடிநீர் திட்ட கோட்ட அலுவலகம் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் கடந்த 8–ந் தேதி தொடங்கியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள கிராம குடிநீர் திட்ட கோட்ட அலுவலகம் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் கடந்த 8–ந் தேதி தொடங்கியது. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரி இந்த தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 7–வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். சங்க தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.


Next Story