தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத் தலைவர் ஜோதி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கருவூலம், வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளதை போல மருத்துவ சிகிச்சை திட்டத்தை தமிழகஅரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வரையறை ரூ.4 லட்சமாகவும், சிறப்பு சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரையிலும் அனுமதிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர காலத்தில் செய்யப்படும் சிகிச்சைகளுக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 10 பேர் சென்றனர். அங்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இல்லாததால் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை ஓய்வூதியர் சங்கத்தினர் அளித்தனர்.
மேலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 20–ந் தேதி சென்னையில் அரசு தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக மாநில துணைத் தலைவர் ஜோதி தெரிவித்தார்.

Related Tags :
Next Story