ரஜினியும், கமலும் பா.ஜனதா கட்சியின் தூதுவர்கள் கதிராமங்கலத்தில் இயக்குனர் கவுதமன் பேட்டி
ரஜினியும், கமலும் பா.ஜனதா கட்சியின் தூதுவர்கள் என கதிராமங்கலத்தில் இயக்குனர் கவுதமன் கூறினார்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 300–வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா இயக்குனர் கவுதமன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் டெல்டா விவசாயிகள் செழிப்பாகி விடுவார்கள். மேலும் போராடுவார்கள் என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. விவசாயிகளை அழிக்க வரும் எமனாக மத்திய அரசு செயல்படுகிறது. மண்ணை அபகரிக்க நினைத்தவர்களின் மூச்சை அடக்குவோம். இதுதான் தமிழர்களின் நிலைப்பாடு. மக்களின் போராட்டம் தொடரும். பிரச்சினையை முடிப்பது மத்திய அரசின் கையில் உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் நின்று மாநிலத்தை கையகப்படுத்த நினைப்பது, நாடகம் நடிப்பது போல போலித்தனமானது. தமிழக மண்ணிற்கு உரியவர்களாக ரஜினியும், கமலும் இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியால் தமிழர்களை அபகரிக்க ஏவப்படுகிற தூதுவர்கள் தான் அவர்கள். நேர்மையானவர்களும், ஒழுக்கமானவர்களும் தான் தமிழகத்துக்கு தேவை. ஒப்பாரி வீட்டில் ஒப்பனையுடன் ஏன் நிற்கிறீர்கள். தமிழ் குடும்பத்துக்கான தலைவரை இளம் தலைமுறையினர் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு 4 சுவர் கொண்ட அறைக்குள் அமர்ந்து கமல்ஹாசன் கண்ணீர் வடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story