சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பள்ளி மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் அவளுடைய உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை ஆவாரம்பாளையம் பாலசுந்தரம் வீதியை சேர்ந்தவர் காளஸ்வரன். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் பவித்ரா (வயது 11). இவள் கோவையில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பக இல்லத்தில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காப்பகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பவித்ராவை கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். மாணவியின் சாவுக்கு மர்ம காய்ச்சல் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பவித்ராவின் தாய் சித்ரா மற்றும் அவருடைய உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடம் அருகே திரண்டனர். அவர்கள் கூறுகையில், பவித்ரா மர்ம காய்ச்சலால் சாகவில்லை. அவளது சாவில் மர்மம் இருக்கிறது. எனவே அவளுடைய உடலை பிரேத பரிசோதனை செய்து, அவள் எதனால் இறந்தாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும் அவளுடைய சாவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சித்ரா கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தார்.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காய்ச்சல் காரணமாகத்தான் மாணவி இறந்தாள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கிச்சென்றனர்.

Related Tags :
Next Story