பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் அடுத்த 4 ஆண்டு காலத்திற்கு புதிய ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் போது ஏற்கனவே உள்ள பல குறைபாடுகளை நீக்க வேண்டும்.

குறிப்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இரண்டுக்கும் முழுமையான செலவு தொகையை காப்பீடு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கான செலவு தொகையை காப்பீடு நிறுவனம் முழுமையாக செலுத்த உத்தரவிடவேண்டும். அரசு மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் அனுமதிப்பது போல் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ குழுவை ஏற்படுத்தவேண்டும். அதில் காப்பீடு நிறுவனம், ஓய்வூதியர்கள் சங்க பிரதிநிதிகளும் அரசு மருத்துவர்களும் இருக்கவேண்டும், மாவட்ட கருவூல அதிகாரி வழிநடத்துபவராக நியமிக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது ஓய்வூதியர்களிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்யப்படும் ரூ.455 கோடியை முழுமையாக காப்பீடு நிறுவனங்கள் செலவழிக்கவேண்டும் என சங்க நிர்வாகிகள் பேசும்போது சுட்டிக்காட்டினார்கள். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன், ஆதிகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story