திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம்


திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளை தவறாக பேசிய பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. துறைக்கு தலைவர் இல்லாததால் வேறு துறை பேராசிரியர் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் பி.பி.ஏ. படிக்கும் மாணவிகளை தவறாக பேசி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று திரு.வி.க கல்லூரி பி.பி.ஏ. மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளை தவறாக பேசிய பேராசிரியரை கண்டித்தும், பி.பி.ஏ. துறைக்கு தனி பேராசிரியர் நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் களின் பேராட்டத்தினால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story