காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க நாராயணசாமி, அமைச்சர்கள் டெல்லி பயணம்
டெல்லி மாநாட்டில் பங்கேற்க முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் டெல்லி செல்கின்றனர்.
புதுச்சேரி,
டெல்லியில் வருகிற 17, 18-ந்தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் முதல்-அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இதற்காக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) புறப்பட்டுச் செல்கிறார்கள். மாநாடு முடிந்ததும் வருகிற 19-ந்தேதி புதுச்சேரி திரும்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story