குடும்ப தகராறை தீர்த்து வைக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
குடும்ப தகராறை தீர்த்து வைக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அக்ரஹாரம் நெடுந்தெருவை சேர்ந்தவர் மும்மூர்த்தி. இவர் தனது குடும்ப தகராறு தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 2003–ம் ஆண்டு ஜூலை மாதம் 24–ந் தேதி புகார் அளிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த போலீசார் குடும்ப தகராறை தீர்த்து வைக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டனர். இதுபற்றி மும்மூர்த்தி தஞ்சையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட அய்யம்பேட்டை போலீசாரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி மும்மூர்த்தி, அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் ஜோதிராம், சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஏட்டு செல்வராஜ் ஆகிய 3 பேரிடம் ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். இதை போலீசார் 3 பேரும் பெற்றுக்கொண்டபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடையும் முன்பாகவே லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜோதிராம், சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி தேன்மொழி தீர்ப்பு கூறினார். அதில் போலீஸ் ஏட்டு செல்வராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story