அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம் 2-வது நாளாக நடந்தது


அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம் 2-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியரை கண்டித்து திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பை புறக் கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. துறைக்கு தலைவர் இல்லாததால் வேறு துறை பேராசிரியர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தபட்ட பேராசிரியர் பி.பி.ஏ. படிக்கும் மாணவிகளை தவறாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சம்பந்தபட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் திரு.வி.க கல்லூரி பி.பி.ஏ. மாணவ-மாணவிகள், பேராசிரியரை கண்டித்து வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எந்தவித நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று 2-வது நாளாக பி.பி.ஏ. மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தபட்ட பேராசிரியரை மாற்றம் செய்து, பி.பி.ஏ. துறைக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

Next Story