பொதுமக்கள் வீட்டையும், நகரத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் திருவண்ணாமலையில் கவர்னர் பேச்சு


பொதுமக்கள் வீட்டையும், நகரத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் திருவண்ணாமலையில் கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வீட்டையும், நகரத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று திருவண்ணா மலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

திருவண்ணாமலை,

தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

கவர்னரின் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கிரிவலப் பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் அமைந்துள்ள நகராட்சி சந்தைமேடு மைதானத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக தூய்மை இந்தியா இயக்கத்தின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கவர்னர் பன்வாரி லால் புரோகித் காலை 10.05 மணியளவில் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார். அவரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பூங்கொத்து கொடுத்து வர வேற்றார். மேலும் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் ஆங்கிலத் தில் உறுதிமொழியை வாசிக்க அதனை அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதையடுத்து கவர்னர் கூறுகையில், ‘மக்கள் தன் சுத்தத்தை காக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். நகரத்தை சுத்தமாக வைக்க வேண்டும். திரு வண்ணாமலை மாவட்டத்தை சுத்தமாக வைத்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண் டும். தமிழகத்தில் திரு வண்ணாமலை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

பின்னர் கவர்னர் தமிழை தெளிவாக வாசிக்க தெரிந்த மாணவர்களை உறுதிமொழி வாசிக்க அழைத்தார். இதை யடுத்து 2 மாணவிகள் மேடை ஏறி தமிழில் உறுதிமொழி வாசித்தனர்.

அதைத்தொடர்ந்து திரு வண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தங்களது சொந்த முயற்சியில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவண்ணா மலை அரசு கலைக் கல் லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் மாணவி நந்தினி, திருவண்ணாமலை மவுண்ட் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ராம கிருஷ்ணன், திருவண்ணா மலை தாலுகா மலப்பம்பாடி கிராமத்தில் தி பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சி.பூஜா மற்றும் எஸ்.வைஷ் ணவி, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், செம்மாம் பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் அஸ்வினி, யுகலட்சுமி, நவீன்குமார் ஆகிய மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தனது கையொப்பமிட்ட அப்துல்கலாமின் புத்தகத்தை வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ‘தூய்மை சக்தி ரதத்தினை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த மத்திய, மாநில அரசுகளின் திட்டங் கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி அரங்கு களையும், மாணவ- மாணவி களின் அறிவியல் கண்காட்சி யையும் நேரில் பார்வை யிட்டார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் யாத்ரி நிவாசில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமினை கவர்னர் பார்வையிட்டார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

இதையடுத்து திரு வண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில், ராஜ கோபுரம் எதிரில் சக்கரைகுளம் அருகில் திருவண்ணாமலை நகராட்சி சார்பாக தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சாலைகளில் உள்ள குப்பை களை அகற்றி, சுத்தம் செய்து தூய்மை பணியில் கவர்னர் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார்.

மேலும், தூய்மை பாரத இயக்கத்தின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி, ஆட்டோக் களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் களை ஒட்டி, நகராட்சி சுகாதார பணியாளர்கள் 345 பேருக்கு தூய்மை செய்வதற் கான உபகரணங்களை கவர்னர் வழங்கினார்.

முன்னதாக அருணா சலேஸ்வரர் கோவில் முன்பு உள்ள சிறு கடை உரிமை யாளர்களிடம் கடையில் உள்ள குப்பைகளை சாலையில் வீசக்கூடாது என்றும், குப்பை தொட்டியை பயன்படுத்த வேண்டும் என்றும், நகராட்சி யின் துப்புரவு பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை விருந் தினர் மாளிகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர் களுடன் விரிவான ஆய்வு மேற்கொண் டார்.

மேலும் அவர், பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி கள் மற்றும் விருப்பமுள்ளவர் களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பாரிஜாதம், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் செண்பகராஜ் மற்றும் அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story