விண்வெளி தூக்கம்


விண்வெளி தூக்கம்
x
தினத்தந்தி 16 March 2018 1:15 PM IST (Updated: 16 March 2018 1:05 PM IST)
t-max-icont-min-icon

நாம் வீட்டில் சுகமாக மெத்தையில் தூங்குவது போலவோ, டி.வி. பார்த்தபடி சோபாவிலேயே தூங்கிவிடுவது போலவோ விண்வெளியில் தூங்க முடியாது. அங்கே பாய்விரிக்க கூட முடியாது.

விண்வெளி வீரர்கள் தூங்குவதற்கென்று தயாரிக்கப்பட்ட ஆளுயர பைகள் இருக்கின்றன.

 கண்ணாமூச்சு ஆடுவதுபோல அந்த பைக்குள் ஒளிந்து கொண்டுதான், உறங்க வேண்டும். விண்வெளியில் நின்று கொண்டும் தூங்கலாம்.

எப்படித் தூங்கினாலும் இடுப்பில் பெல்ட் அணிந்து, அசையாத பொருளில் கட்டிக் கொண்டுதான் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் மிதந்து நகர்ந்து போய்டுவார்கள்.

Next Story