விபத்தில் பள்ளி மாணவி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
பாகலூர் அருகே பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவி பலியானதின் எதிரொலியாக பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மகள் மானஷா (வயது 13). இவர் நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தோழி ரக்ஷிதா (12). இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சொக்கநாதபுரத்தில் இருந்து நல்லூர் பள்ளிக்கு தினமும் அரசு டவுன் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் சென்றனர். சொக்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து 2 மாணவிகளும் இறங்கினார்கள். அப்போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை பின்நோக்கி எடுத்தார். அந்த நேரம் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி, மானஷா சம்பவ இடத்திலேயே பலியானார். மாணவி ரக்ஷிதா படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து நேற்று காலை சொக்கநாதபுரம் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கக்கனூர்-ஓசூர் சாலையில் டிரைவர் மற்றும் கண்டக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்கு காரணமான பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் மற்றும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.
அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சம்பந்தப்பட்ட பஸ்சின் டிரைவர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே விபத்தில் பலியான மாணவி மானஷாவின் குடும்பத்தினரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி ரக்ஷிதாவிடம் அமைச்சர் நலம் விசாரித்தார்.

Related Tags :
Next Story