கரூரில் விளையாட்டு விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூரில் விளையாட்டு விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என மாணவ- மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்,
பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களை தனியாக தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல மாவட்டங்களில் விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறந்தவர்களை தேர்வு செய்து அரசு செலவினங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய விளையாட்டு விடுதி கரூரில் மட்டும் இல்லை. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதாக விளையாட்டு துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் எந்தவொரு மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் விளையாட்டு விடுதி ஒன்று அமைக்க கரூர் தேர்வு செய்யப்பட்டபோது போதுமான இட வசதி இல்லாததால் கைவிடப்பட்டது.
மாவட்ட விளையாட்டரங்கத்தை தவிர்த்து வேறு எங்காவது தற்காலிகமாக ஒரு கட்டிட வசதியை தேர்வு செய்து அதில் விளையாட்டு விடுதி அமைத்தால் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ- மாணவிகள் பயன்பெறுவார்கள். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என மாணவ- மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி அருகே பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தற்போது காலி கட்டிடமாக தான் உள்ளது. அந்த கட்டிடத்தை புனரமைத்து அங்கு விளையாட்டு விடுதி தற்காலிகமாக அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என மாணவ- மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அந்த கட்டிடத்தில் இருந்து சிறிது தொலைவில் தான் மாவட்ட விளையாட்டரங்கம் இருப்பதால் வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு சென்று வர எளிதாக இருக்கும். கரூர் மாணவ- மாணவிகள் கபடி, கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகு பந்து ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் ஊக்கப்படுத்தி மேன்மை அடையும் வகையில் விளையாட்டு விடுதி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story