ஒருமாதமாக பின் தொடர்ந்து சென்று பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபர் கைது


ஒருமாதமாக பின் தொடர்ந்து சென்று பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 March 2018 4:30 AM IST (Updated: 17 March 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை ஒரு மாதமாக பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை வாலிபர் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த மாணவியிடம், ‘உன்னை நான் காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்று அந்த வாலிபர் ஆசை வார்த்தைகளை கூறி காதல் தொல்லை கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி கல்லூரி ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

வாலிபர் கைது

அவர்களுடைய ஆலோசனையின் பேரில் கோட்டூர்புரம் போலீஸ்நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவிக்கு காதல் தொல்லை கொடுக்கும் நபரை மாறுவேடத்தில் சென்று பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி அந்த வாலிபரின் வருகைக்காக போலீசார் மாறுவேடத்தில் கல்லூரி முன்பு காத்திருந்தனர். அப்போது அங்கு வழக்கம்போல் மாணவிக்கு காதல் தொல்லை கொடுப்பதற்காக வந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் பெயர் பாபு(வயது29) என்பதும், அவர் செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

Next Story