ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகும் உணவுகள்
நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தே நம் ஆரோக்கியம் அமைகிறது. மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கொண்ட 100 உணவுப்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் சுலபமாகக் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சிலவற்றைப் பற்றி...
புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளன. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97 ஆகும்.
பாதாமைப் போலவே ஆரோக்கியத்துக்கு அவசியமானது, உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.
சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், சாத்துக்குடி என புளிப்புச் சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்துக்குப் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமானத்தையும் சீராக்குகின்றன.
‘அசிடிட்டி’ எனப்படும் தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு நல்ல மருந்து. உலகின் எல்லா நாடுகளிலும் விளையும் ஆரஞ்சு பழத்துக்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51. பொலிவான, அழகான தோற்றத்தைப் பெற விரும்புவோர், ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.
மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள் (ஆன்டிஆக்சிடன்ட்) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.
வெயில் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்ப்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரையும் மறந்து விடக்கூடாது.
நம்மூரில் பூசணி வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்துச் சாப் பிடலாம்.
முலாம்பழமும் நன்மை பயப்பது. 100 கிராம் முலாம் பழத்தில் 34 கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50.
வாழைத்தண்டு, நீர்ப்பூசணி, சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் எனப் பல காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. முட்டைக்கோஸ், காலிபிளவர், புராக்கோலி போன்றவையும் உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுபவை.
கேரட் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். எல்லா இடங்களிலும் சாதாரணமாகக் கிடைக்கும் கேரட்டை அப்படியே சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள கேரட், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.
கொழுப்புச் சத்து பிரச்சினையைத் தீர்ப்பதில் பயறு வகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. பச்சைப் பயறு, தட்டைப் பயறு, சோயா பயறு என பயறு வகைகள் அனைத்துமே சைவ உணவு உண்பவர்களுக்குக் கிடைத்த வரம். காரணம், இவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது.
முதிராத பயறுகளில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 28 சதவீதம் வரை புரதச்சத்தும், 60 சதவீதம் அளவுக்கு மாவுச்சத்தும் உள்ளன.
நமது சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தும் இஞ்சி, ஆரோக்கியத்துக்கான அருமருந்து. அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் கொண்ட இஞ்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பல ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படும் இஞ்சி, தொண்டைக்கு ஏற்றது. உடல் வலியைக் குறைப்பதில் இது உதவுகிறது, செரிமான திறனையும் மேம்படுத்துகிறது.
உடலுக்கு மிகவும் நன்மை அளிப்பது, அத்திப்பழம். இப்பழத்தை உலர வைத்தும் பயன்படுத்தலாம். மாங்கனீஸ், புரதம், சர்க்கரைச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அத்திப்பழத்தில் அதிக அளவில் உள்ளன. மற்ற பழங்களில் இருப்பதைவிட அத்திப்பழத்தில் இந்தச் சத்துகள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகளும் இப்பழத்தில் இருக்கின்றன.

Related Tags :
Next Story