பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட கோரி வங்கி ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட கோரி தஞ்சையில் வங்கி ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தொடங்கியது. இதற்கு வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த வங்கிகள் மேலும் பலப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடனை தள்ளுபடி செய்யக்கூடாது. வராக்கடன்களை விரைவாக வசூலிக்கும் வண்ணம் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கட்டாதவர்களின் பெயர் பட்டியலை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும். வராக்கடன்கள் சம்பந்தமான பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமலாக்க வேண்டும். வங்கி சேவைகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கக்கூடாது. வங்கிகளின் வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும்.
வங்கி வைப்பு நிதி மீதான வட்டிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான மூலதனம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கம் தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1 மாத காலத்திற்கு கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்துடன் கோரிக்கை மனு பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story