வேலூர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் தர்பூசணி விற்றால் கடும் நடவடிக்கை


வேலூர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் தர்பூசணி விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் தர்பூசணி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

கோடை காலம் தொடங்குவதையொட்டி வேலூர் பகுதியில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக தர்பூசணி வருகிறது. அவை, சாலை ஓரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சாலை ஓரமாக விற்பனை செய்யப்படும் தர்பூசணிகள் சில இடங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

பொதுமக்களை கவருவதற்காக தர்பூசணியை வெட்டி திறந்தவெளியில் அடுக்கி வைத்து இருப்பது, தர்பூசணியை வட்ட வடிவில் வெட்டி அங்குள்ள மரங்களில் தொங்க விடப்படுவது, ஈக்கள் மொய்க்கும் வகையில் திறந்தவெளியில் வைத்து விற்பதாக கூறப்படுகிறது. சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை காலத்தையொட்டி போலி குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டத்தில் 65 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குடிநீர் கேன்களின் மூடியில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், தர முத்திரையை பொறிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

எனவே பொதுமக்கள் குடிநீர் நிரப்பப்பட்ட கேன்களை வாங்கும்போது, அதனை பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்தாலோ, சுகாதாரமற்ற முறையில் தர்பூசணி விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story