கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமணன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஏற்கனவே பின்பற்றியப்படி, அனைத்து அரசு சுகாதார நிலையங்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிட வேண்டும். மாநில அரசுக்கு கீழ் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு வழங்கிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Next Story