அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து, ஆவணங்கள் தப்பின


அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து, ஆவணங்கள் தப்பின
x
தினத்தந்தி 18 March 2018 3:15 AM IST (Updated: 18 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பாலையம்பட்டியில் அமைந்துள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பாலையம்பட்டியில் அமைந்துள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கருப்பசாமி என்பவர் காவலாளியாக இரவுப்பணியில் இருந்தார். இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் இருந்து புகை கிளம்பியது. இதைப்பார்த்ததும் காவலாளி கருப்பசாமி தீயணைப்பு படையினருக்கும் டவுன் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு படையினரும் போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பின்னர் தீஅணைக்கப்பட்டது.இந்த தீவிபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் இருந்த மேஜை, நாற்காலி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக கோப்புகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மின்கசிவால் ஏ.சி. வெடித்ததே தீவிபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story