ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது: இயக்குனர் ரவிரத்தினம் பேட்டி
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப் படுகிறது என்று மதுரையில் இயக்குனர் ரவிரத்தினம் தெரிவித்தார்.
மதுரை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக மதுரையில் இயக்குனர் ரவிரத்தினம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் பிறப்பு முதல் அவரது வளர்ச்சி, சினிமா வாழ்க்கை, அரசியல் பயணம் என அனைத்து விஷயங்களும் மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே அதனை திரைப்படமாக எடுக்க உள்ளேன். இதற்காக ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களை சந்தித்து வருகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினை, காவிரிநீர் விவகாரம், கிருஷ்ணா நதிநீர் விவகாரம், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விஷயத்தில் அவரின் நிலைப்பாடு ஆகியவை பற்றி பதிவு செய்ய உள்ளேன்.
ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது முகச்சாயலை கொண்ட ஒருவரை தேர்வு செய்திருக்கிறோம். மே மாதம் படப்பூஜை தொடங்கும்போது அவரை அறிமுகம் செய்வோம். இப்படத்தினால் பிரச்சினை எதுவும் வராது. ஏன் என்றால் ஜெயலலிதா பொதுமக்களுக்கானவர். அவரது இல்லம் அரசுடமையாக்கப்படும் போது அவர் குறித்து பதிவு செய்வதில் தவறில்லை.
இருப்பினும் முதல்-அமைச்சர் உள்பட அதில் தொடர்புடைய அனைவரிடமும் ஆலோசித்து அனுமதி பெறுவேன். ஜெயலலிதா வாழ்ந்த சிவஞானம் தெரு, போயஸ்கார்டன் பகுதி உள்பட 234 தொகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story