ரூ.5½ கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டுமான பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
சின்னங்குடி மீனவ கிராமத்தில் ரூ.5½ கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டுமான பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மருதம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னங்குடி மீனவ கிராமத்தில் நபார்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பாரதிமோகன் எம்.பி., பவுன்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டுமான பணியை தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு கட்டப்பட உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் சின்னங்குடி பகுதி மீனவர்கள் 350 விசை படகுகள், 200 கட்டு மரங்கள் நிறுத்தலாம். இந்த மீன்பிடி இறங்கு தளத்தின் மூலம் ஏராளமான மீனவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
இதில் மீன்வளத்துறை இணை இயக்குனர் வீணா செல்வி, உதவி இயக்குனர் கங்காதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story