2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது


2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2018 3:45 AM IST (Updated: 18 March 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் அறக்கட்டளை நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 30). இவரது கணவர் பெரியசாமி, கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு காவ்யா, அன்புச்செல்வன் என 2 குழந்தைகள் உள்ளனர். இரூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பெரம்பலூரில் கான்செப்ட் இந்தியா என்ற அறக்கட்டளை நிறுவனத்தில் நடத்தி வரும் மகளிர் குழுவுக்கு பணம் வசூல் செய்து கொடுக்கும் வேலையை அழகம்மாள் பார்த்து வந்தார். பெரம்பலூரிலுள்ள அந்த அறக்கட்டளையின் அலுவலகத்துக்கு அழகம்மாள் ஒரு குறிப்பிட்ட தனியார் பஸ்சில் சென்று வந்த வகையில், அந்த பஸ்சின் டிரைவரான திட்டக்குடி, ஆதனு£ரை சேர்ந்த வேல்முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது.

தீக்குளித்து தற்கொலை


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் அழகம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது அழகம்மாளுக்கும், வேல்முருகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அழகம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். அழகம்மாளை காப்பாற்ற முயன்ற வேல்முருகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

வாக்குமூலத்தில் பகீர் தகவல்


அழகம்மாள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் பெரம்பலூர் கான்செப்ட் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் தன்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றி தவறாக கணக்கு காண்பித்ததாகவும், மேலும் டிரைவர் வேல்முருகன் தன்னை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மங்களமேடு போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணைக்காக ரவிச்சந்திரன், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story