அரசு பஸ் –தனியார் பள்ளி வேன் மோதல்; மாணவர்கள், பயணிகள் உள்பட 18 பேர் காயம்
முசிறி அருகே அரசு பஸ்சும், தனியார் பள்ளி வேனும் மோதிக்கொண்டதில் மாணவர்கள், பஸ் பயணிகள் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர்.
முசிறி,
முசிறி– துறையூர் சாலையில் செல்லம்மாள் வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று த.புத்தூர், பொன்னாங்கன்னிப்பட்டி, நெய்வேலி, வீரமணிப்பட்டி, ஏவூர், வெள்ளூர் அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ–மாணவிகளை பள்ளிக்கு சொந்தமான வேன் ஏற்றிக்கொண்டு முசிறியை நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை டிரைவர் கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார்.
முசிறி அருகே உள்ள உமையாள்புரம் மெயின்ரோட்டில் பள்ளி வேன் வந்தபோது, எதிரே ஈரோட்டில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேன் மற்றும் பஸ்சின் முன்பகுதிகள் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஜித்தேந்திரன், ஆத்தீஸ்வரன், அபினேஸ்வரன், ஹரிபிரசாத், ஸ்ரீனேஸ்வரன் உள்பட 6 மாணவர்கள், அரசு பஸ் டிரைவர் சரவணன், பஸ்சில் பயணம் செய்த மணமல்லி, பார்வதி, சகாயமேரி, தங்கவேல், நிஷா, கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், சுகப்பிரியா, மனோகரன் உள்பட 11 பயணிகள் என மொத்தம் 18 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பயணி தங்கவேல், பள்ளி வேன் கிளீனர் பெருமாள் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்–இன்ஸ்பெக்டர் ராம்குமார், ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடததினர். மேலும் விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் –பள்ளி வேன் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்டோர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story