சென்னையில் 298 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்


சென்னையில் 298 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பான காவல் பணி:சென்னையில் 298 போலீசாருக்கு முத ல்-அமைச்சர் பதக்கம்கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.

சென்னை,

தமிழக காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு முதல்-அமைச்சர் காவல் பதக்கங்கள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு சென்னை காவல்துறையில் 298 போலீசார் முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விழாவில், 298 போலீசாருக்கும், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முதல்-அமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘போலீசாருக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம். மக்கள் பணியில் நாம் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.’ என்று அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது போலீசாரின் குடும்பத்தினர் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் எஸ்.என்.சேஷசாய், எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், ஏ.அருண், எம்.டி.கணேசமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story