ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 19 March 2018 4:00 AM IST (Updated: 18 March 2018 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னகுப்பம் பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று அதிகாலை அந்த வழியாக போலீசார் ரோந்து வாகனத்தில் வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்மநபர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தனர்.

அங்கு இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் கொள்ளை போகாமல் தப்பியது.

இதனை தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வங்கி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story