வில்லியனூரில் திராவிடர் கழகம் - பா.ஜ.க. மோதலில் 20 பேர் மீது வழக்கு
வில்லியனூரில் திராவிடர் கழகம் - பா.ஜ.க.வினர் மோதலில் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் நேற்று முன்தினம் இரவு திராவிடர் கழகம் சார்பில் மணியம்மையார் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையில் இருந்து வீரமர்த்தினி, அருள் மொழி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது கடவுள் குறித்து விமர்சித்து பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்து கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடையை நோக்கி திடீரென்று செருப்பு வீசியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க.வினர், தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திராவிடர் கழகத்தினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தி.க.வினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக உருவானது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக பா.ஜ.க. தரப்பிலும், திராவிடர் கழகம் தரப்பிலும் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பா.ஜ.க. நிர்வாகிகள் மோகன்குமார், பாலபாஸ்கரன், அகிலன் உள்பட 13 பேர் மீதும், தி.க. நிர்வாகிகள் சிவ.வீரமணி, ராஜு, சடகோபன் உள்பட 7 பேர் என மொத்தம் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story