ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தில் தொழில் நுட்ப பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்


ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தில் தொழில் நுட்ப பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 March 2018 3:45 AM IST (Updated: 19 March 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தில் தொழில் நுட்ப பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் நிர்வாக பொறுப்பாளர் இந்திரா கவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் தையல் எந்திரம் இயக்கும், சிறப்பு வடிவமைக்கப்பட்ட தையல் எந்திரம் இயக்கும் பயிற்சி 75 நாட்களுக்கும், பேட்டர்ன் மாஸ்டர் பயிற்சி 6 மாதமும், பினிஷர் 3 மாதமும், கைவேலை தையல் பூ வேலைபாடு 75 நாட்களும், சுயதொழில் தையல் 3 மாதமும், மாதிரி (சேம்பிள்) ஒருங்கிணைப்பாளர் 4 மாதமும் அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுவதோடு, பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு ஒவ்வொரு மாதமும் சேர்க்கை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதுள்ளவர்கள் தங்களது பள்ளி மாற்று சான்றிதழ், சாதி, வருமான சான்றிதழ்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைபடம் -8 ஆகியவற்றுடன் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story