தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 19 March 2018 4:00 AM IST (Updated: 19 March 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் குடிக்காடு கிராமத்தில், தி.மு.க. ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் குடிக்காடு கிராமத்தில், தி.மு.க. ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலத்தூர் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி அணி அமைப்பாளர் கரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரமேஷ், சுந்தரராசு, புஷ்பவள்ளி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story