தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
பயிர் காப்பீட்டு தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வாங்கினார்.
எட்டயபுரம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி மற்றும் முதலிபட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் 2016-17-ம் ஆண்டு பாசிப்பயறு, உளுந்து, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து இருந்தோம். இதுவரை எங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா கல்லத்தி கிணறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள வடக்கு தெரு, கருப்பசாமி கோவில் தெரு, கடை தெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதை, சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் கழிவு நீர் சீராக வெளியேறாமல் வீடுகளுக்கு முன்பு தேங்கி கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கழிவு நீர் சீராக வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் மற்றும் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டு பயிர் காப்பீடுகளை முழுமையாக வழங்க வேண்டும். விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி வி.வி.டி. பிரதான சாலையில் உள்ள அண்ணாநகர் 2-வது தெரு, 8-வது தெரு, 10-வது தெரு சந்திப்புகளிலும், டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பிலும் அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூல் செய்த 27 தனியார் மினி பஸ்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் மினி பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆதிதமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியில் அருந்ததியர் மக்களுக்கு குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்காக சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நாங்கள் 1994-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றி வருகிறோம். எங்கள் ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தகுந்த மருத்துவ ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் உடல் தகுதியுடன் உள்ளனர்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூலம் எங்கள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைத்து வருவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து உற்பத்தி நடக்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆவணம் செய்து தொழில் வளத்தை பெறுக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story