சதுரகிரி மலைக்கு செல்ல தடை: பக்தர்கள்- வனத்துறையினர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ?
சதுரகிரிக்கு வரும் பக்தர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே ஏற்படும் மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்திட பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி அமாவாசையின் போது 3 நாட்களும் பவுர்ணமியின்போது 3 நாட்களும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் திடீரென மழை பெய்து வனப்பகுதியில் விபரீதம் நிகழும் வாய்ப்பு இருப்பதால் வனத்துறையினர் கெடுபிடி செய்கின்றனர்.
மேலும் குரங்கணி சம்பவத்தை தொடர்ந்து தற்போது கூடுதல் சிரத்தை எடுக்கின்றனர். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் தீவிரமாக இருப்பது வனத்துறையினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. மலைக்கு சென்ற பிறகு கூட வானிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் வயர்லெஸ் மூலமாக வனத்துறையினர் தகவல் கொடுத்து பக்தர்களை கோவிலில் பல மணி நேரம் காத்திருக்கச்செய்து பின்னர் பாதுகாப்பாக மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்த பின்னரே பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முன்பு தினமும் அனுமதிக்கப்பட்ட போது வனவிலங்குகள் குறுக்கீடு இல்லாமல் இருந்தது. தற்போது கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் அதனையும் வனத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனாலும் பக்தர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. வெளியூரில் இருந்து வந்துவிட்டோம் எப்படியாவது தரிசனத்துக்கு அனுமதியுங்கள் என்று குரல் கொடுக்கின்றனர். ஒரு சிலரே அடிவாரத்தில் உள்ள உதயகிரி நாதரை வழிபட்டுவிட்டு திரும்புகின்றனர்.
எனவே வருவாய்த்துறை, வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் உள்ளங்கைகளுக்குள் உலகம் வந்து விட்ட தகவல் தொழில் நுட்ப புரட்சி யுள்ள இந்த காலத்தில் வெளியூரில் இருந்து புறப்படுவோர் வானிலை நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தங்களது பயணத்தை தொடங்குவதே தற்போதைய சூழலுக்கு உகந்தது என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுந்தரமகாலிங்கம் என்ற பக்தர் கூறியதாவது:-
அரிய மூலிகையுள்ள இந்த மலையில் 18 சித்தர்கள் இருப்பதாக ஐதீகம் உள்ளது. தற்போது சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பக்தர்கள் தங்கிச்செல்ல ஆங்காங்கே மண்டபம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். வனத்துறையினரின் கட்டுப்பாட்டினால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்கு வருமானம் குறைந்து விட்டது. பழனியைப்போல இங்கு ரோப்கார், இழுவை ரெயில் போன்றவை அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story