ராமநாதபுரத்தில் நள்ளிரவில் பயங்கரம்: பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கோட்டைமேடு கோழிக்கூட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜன்(வயது42). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா(40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுடைய மகன் கவுதம்(19). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் தனுஷ்கா(16) தாய் சண்முகப்பிரியா பணியாற்றும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மோகன்ராஜன் வீட்டின் பக்கத்தில் குடியிருப்பவர் ஒருவர் நடைபயிற்சி செல்வதற்காக சென்றபோது அவரின் நாய் குரைத்தபடி இழுத்து சென்றுள்ளது. பிறகு நேராக சண்முகப்பிரியா இறந்து கிடந்த இடத்தின் அருகே சென்று குரைத்ததாம். அங்கு சண்முகப்பிரியா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது சண்முகப்பிரியா கழுத்தை கயிற்றால் இறுக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சத்தம் கேட்டு மோகன்ராஜன் மகளுடன் வந்து பார்த்து அழுதுள்ளார்.
இதுபற்றி தகவல்அறிந்த ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
சண்முகப்பிரியாவின் உடலின் அருகில் மோகன்ராஜன் எந்தவித சலனமுமின்றி பதற்றமின்றி இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீசார் மோகன்ராஜனை பிடித்து சென்று விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையின்போது மோகன்ராஜன் தனது மனைவி சண்முகப்பிரியாவிற்கு அதிகாலையில் சர்ச்சிற்கு செல்லும் வழக்கம் இருந்ததாகவும், அதிகாலை 4 மணி அளவில் மனைவியை காணவில்லை என்று மகள் கூறியதால் அவரை அழைத்துக்கொண்டு சர்ச் உள்ளிட்ட இடங்களில் தேடியதாகவும், எங்கும் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.
மேலும் கழுத்தை இறுக்கி கொலை செய்ய பயன்படுத்திய நைலான் கயிற்றின் மீதி பாகம் வீட்டினுள் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் போலீசாருக்கு மோகன்ராஜன் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் மோகன்ராஜனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரவிசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மனைவியை கொலை செய்ததை மோகன்ராஜன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சண்முகப்பிரியா எந்த நேரமும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு சண்டை முற்றியதில் சண்முகப்பிரியா சென்னையில் உள்ள தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். மகளுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடப்பதால் தேர்வு முடிந்ததும் செல்லுமாறு சமாதானப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தனது பேச்சை கேட்காமல் செயல்படும் மனைவியை தீர்த்துகட்டுவது என்ற முடிவு செய்து நள்ளிரவில் மனைவியை காற்றுவாங்கியபடி பேசுவதாக சமாதானப்படுத்தி மோகன்ராஜன் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஏற்கனவே வீட்டில் இருந்த கயிற்றை அறுத்து எடுத்துக்கொண்டதோடு, கத்தியும் இடுப்பில் வைத்து கொண்டு சென்றுள்ளார். வீட்டின் வெளியே சென்றதும் கழுத்தை கயிற்றால் இறுக்கி கீழே தள்ளிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன்பின்னர் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்குள் வந்து படுத்துதூங்கி உள்ளார். அதிகாலை 4.30 மணியளவில் மகள் தனுஷ்கா படிப்பதற்காக எழுத்து பார்த்தபோது தாயை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தந்தையிடம் கூறியுள்ளார்.
மோகன்ராஜனும் எதுவும் தெரியாததுபோல நடித்து மகளுடன் சேர்ந்து வெளியில் சென்று தேடியுள்ளார். இதன்பின்னர் விடிந்ததும் வந்துவிடுவார் என்று சமாதானம் செய்து வீட்டிற்கு வந்துள்ளார். அதிகாலையில் சண்முகப்பிரியா கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் அப்பாவிபோல் வெளியில் வந்து நாடகமாடி உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
சண்முகப்பிரியாவின் மகன் கவுதம் நேற்று முன்தினம் தான் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தாய் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கதறி அழுதபடி திரும்பி வந்துள்ளார். மகள் தனுஷ்கா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவரும் வேளையில் தாய் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்தசம்பவம் தொடர்பாக கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோகன்ராஜன் தொடர்ந்து முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்து வருவதால் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Tags :
Next Story