பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
புதுக்கடை அருகே பெண்ணிடம் 13 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் மாங்குளத்துவிளையை சேர்ந்தவர் ஆர்தர் டென்னிஸ். இவரது மனைவி மலர்விழி (வயது 50). இவர் சம்பவத்தன்று மாலை வீட்டின் பின்பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு மர்ம நபர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். அவர் திடீரென மலர்விழி கழுத்தில் கிடந்த 13 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி நகையை பிடித்தபடி, ‘திருடன்... திருடன்...’ என கத்தினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மலர்விழியை கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story