தேவேந்திரர் நலக்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தேவேந்திரர் நலக்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் கடைவீதியில் தேவேந்திரர் நலக்கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் கடைவீதியில் தேவேந்திரர் நலக்கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் கவுரவத்தலைவர் தனிஸ்லாஸ் தலைமை தாங்கினார். தொகுதி கூட்டமைப்பு தலைவர் உலகராஜ் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் அறந்தாங்கி மன்னர்மன்னன், கொள்கைபரப்பு செயலாளர் முல்லைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலைவசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Next Story