டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.1¼ லட்சம் திருட்டு
மணலி டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.1¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த மணலி காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர்.நகர் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் ராஜசேகர் என்பவர் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த கடையில் நேற்று முன்தினம் மதுபானம் விற்பனை செய்த பணத்தை அவர் கல்லாபெட்டியில் வைத்த பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று மதியம் 12 மணிக்கு வந்து கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின்புறம் உள்ள மரக்கடை வழியாக வந்து டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்து கடையின் உள்ளே கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த துணிகர திருட்டு குறித்து ராஜசேகர் மணலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர் களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story