சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
மானத்தி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக பழைய காலனி பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வது இல்லை.
3 நாட்களுக்கு ஒருமுறை 2 குடம், 3 குடம் என்ற அளவில் மிகவும் குறைவாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே குடிநீர் தொட்டிக்கு அருகே பைப்-லைன் அமைத்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட வீடுகளுக்கு தனியாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story