தர்மபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தேசிய விருது


தர்மபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தேசிய விருது
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் செயல்படும் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 2017-ம் ஆண்டிற்கான 10-வது மண்டலத்தின் சிறந்த வேளாண்மை அறிவியல் நிலையம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.

தர்மபுரி,

புதுடெல்லியில் வேளாண்மை அறிவியல் நிலையங்களின் அதிகாரிகள் பங்கேற்ற தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் செயல்படும் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 2017-ம் ஆண்டிற்கான 10-வது மண்டலத்தின் சிறந்த வேளாண்மை அறிவியல் நிலையம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் பிலிப், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் சாகுபடி, கால்நடை பராமரிப்பு, விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் சார்ந்த தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் பொருளாதார நிலையில் நேர்மறையாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story