விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயம்
விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்ப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜகிரி குளவாய்ப்பட்டியில் மதிய கருப்பகோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டன. அதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளையை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 698 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அந்த காளைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் சந்துரு(வயது 24), பாண்டியன்(20), பெரியசாமி(60), நாகராஜ்(27), கார்த்திக்(24), கணேசன்(45), திருப்பதி(24) உள்பட 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, கட்டில், பீரோ, ரொக்க பணம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி மற்றும் ராஜகிரி குளவாய்ப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மந்திரமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story