கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் செயற்பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வந்திருந்த அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் சுந்தரவல்லி பேசும்போது கூறியதாவது.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக முதல்நிலைக்கு 104 சங்கங்களுக்கும், 2–வது நிலைக்கு 139 சங்கங்களுக்கும், 3–வது நிலைக்கு 139 சங்கங்களுக்கும், 4–வது நிலைக்கு 196 சங்கங்களுக்கும் என மொத்தம் 578 சங்கங்களுக்கு தேர்தல் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக வேட்புமனு தாக்கல் படிவம் மற்றும் அனைத்து விவரங்களையும் www.coopelection.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது வெள்ளைத்தாளில் உரிய படிவத்தில் குறிப்பிட்டவாறு கைப்பட எழுதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதனை தேர்தல் அலுவலர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் பதற்றமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) தீபக்ஜேக்கப், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலர் அந்தோணிசாமி ஜான்பீ, சரகதுணைப்பதிவாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், செயற்பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story